முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ்  ANI
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு! பாராமதி விரையும் முதல்வர்!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மறைவு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று பொது விடுமுறை அளித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளர்.

மேலும், மாநிலம் முழுவதும் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்ற அஜீத் பவாரின் தனி விமானம் புதன்கிழமை காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.

தரையில் மோதிய விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஃபட்னாவீஸ் பேசியதாவது:

“மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். மாநிலத்தில் சோகமான சூழல் நிலவுகிறது. அவரைப் போன்ற ஒரு தலைவரை இழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை நாங்கள் ஒன்றாக சந்தித்தோம். மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்து வந்த நேரத்தில், அவரது அகால மரணம் ஒரு பேரிழப்பாகும்.

நாங்கள் அவரது குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம். நானும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று பாராமதிக்குச் செல்லவுள்ளோம்.

இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தேன், அவர்களும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.

Three days of mourning in Maharashtra: The Chief Minister rushes to Baramati!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைத்தாலே இனிக்கும் நாயகியுடன் இணையும் மோதலும் காதலும் தொடர் நடிகர்!

விமான விபத்தில் அஜீத் பவார் பலி!

தவெக கொடியுடன் ஆபத்தான சாகசம்! 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை!

வீடு எப்போதும் சுத்தமாக இருக்க.. எளிய வழிகள்!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT