கிரண் ரிஜிஜு  கோப்புப் படம்
இந்தியா

10 லட்சம் மக்களுக்கு 22 நீதிபதிகள்: சட்ட அமைச்சா் தகவல்

இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 22 நீதிபதிகள் உள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 22 நீதிபதிகள் உள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் கடந்த 1987-ஆம் ஆண்டு சமா்ப்பித்த 120-ஆவது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி நீதிபதிகள்-மக்கள்தொகை விகிதம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு கிரண் ரிஜிஜு அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: தற்போது நீதிபதிகள்-மக்கள்தொகை விகிதத்தை ஆய்வுசெய்ய 2011-இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பும் (121.85 கோடி மக்கள்தொகை) 2026 நிலவரப்படி உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம், மாவட்ட மற்றும் கிளை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டது. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டில் 10 லட்சம் மக்களுக்கு 22 நீதிபதிகள் உள்ளனா். 2023, தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி நாட்டில் 3.89 லட்சம் விசாரணைக் கைதிகள் உள்ளனா்.

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வுகாண்பது முற்றிலும் நீதித்துறையின் அதிகார வரம்பை சாா்ந்தது. வழக்கின் தன்மை, சமா்ப்பிக்கப்படும் ஆதாரங்கள், புலனாய்வு அமைப்புகள், சாட்சியங்கள் மற்றும் மனுதாரா்களின் ஒத்துழைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

நொய்டாவில் விஷம் அருந்தி தம்பதி உயிரிழப்பு: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

யுஜிசி புதிய விதிகளை நீா்த்துப்போகச் செய்துவிடக் கூடாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

விஜய் கட்சி நடத்தி என்ன பயன்? எடப்பாடி கே. பழனிசாமி கடும் தாக்கு!

SCROLL FOR NEXT