உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி சிறுத்தை தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நிஷாங்கர்கா மலைத்தொடரில் உள்ள ராம்பூர்வா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட முகியா பண்ணை கிராமத்தில் வசிப்பவர் மனோஜ். இவரது மகள் அனுஷ்கா (4). இச்சிறுமி வியாழக்கிழமை மாலை தனது வீட்டிற்கு வெளியே உள்ள முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சிறுத்தை, சிறுமியைத் தாக்கி இழுத்துச் சென்றது.
குடும்ப உறுப்பினர்களும் கிராம மக்களும் சப்தமிட்டு சிறுத்தையை விரட்டினர். பின்னர் வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் குழந்தையை விட்டுவிட்டு சிறுத்தை அருகே உள்ள புதர்களுக்குள் ஓடிவிட்டது. காயமடைந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
ஆனால் வழியிலேயே சிறுமி பலியானாள். சிறுமியின் கழுத்து மற்றும் மூக்கில் காயங்கள் காணப்பட்டதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
சிறுத்தை தாக்கியதால் சிறுமி பலியானதாக நிஷாங்கர்கா ரேஞ்ச் அதிகாரி சுரேந்திர ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். வனத்துறை குழுவினர் இரவில் தாமதமாக சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். சம்பத்தைத்தொடர்ந்து அப்பகுதியில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்புக்காக நான்கு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தினருக்கு உடனடி நிதி உதவியாக ரூ.10,000 வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.