நாட்டில் வேலையின்மையும் பண வீக்கமும் பரவலாக இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்களுடன் பூபேஷ் பகேல் பேசுகையில், “நாளை விடுமுறை நாள் மட்டுமின்றி, ரவிதாஸ் ஜெயந்தியும்கூட. இந்த நாளில் பட்ஜெட் தாக்கல் செய்பவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?
நாட்டில் பரவலான வேலையின்மை மற்றும் பணவீக்கம் நிலவுகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கான உரிய நியாயமான விலையைக்கூட பெற முடியவில்லை.
தொழிலாளர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமும் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஜிஎஸ்டி-யால் ஏற்கெனவே மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.