31 வாரங்கள் ஆன சிசுவின் மூளையில் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கருவைக் கலைக்க தம்பதிக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்தக் கரு குழந்தையாக பிறந்தால், மிக மோசமான உடல்நலப் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவ வாரியம் அளித்த அறிக்கையை ஏற்று, 31 வார கருவைக் கலைக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
இந்த கருவைத் தொடர்வது, கர்ப்பிணியின் மன நலனையும் கடுமையாக பாதிக்கும் என்றும், அதனால் அவரது உடல்நிலையும் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
உண்மை நிலவரம், மருத்துவ அறிக்கைகள், சட்ட விதிகளுக்கு உள்பட்டு அனைத்து அடிப்படை தகவல்களையும் ஆராய்ந்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, தவிர்க்க முடியாத துயரத்தை தாமதப்படுத்துவது, குடும்பத்தின் துன்பத்தை நீட்டிக்க மட்டுமே கூடும். எனவே, கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கருவைக் கலைக்க உத்தரவிடுகிறேன்.
மருத்துவக் குழு, கருவைக் கலைத்து, முதல் மனுதாரரின் (பெண்) உயிரைக் காப்பாற்ற மருத்துவ அறிவியலில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த நடைமுறையைப் பின்பற்றும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நீதிபதி, கருக்கலைப்புக்கு முன்பு, மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து, குழந்தையிள் மூளை வளர்ச்சியில் குறைபாடு இருப்பதை மருத்துவக் குழு உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, குழந்தை உயிருடன் பிறக்க நேரிட்டால், அதற்குரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும், அதன் பெற்றோர், குழந்தைக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.