இந்தியா

ஃபரீதாபாத்: தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழப்பு

ஃபரீதாபாத்: தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஃபரீதாபாத்தில் உள்ள பகால் கிராமத்தில் பிளைவுட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிலாளா்கள் உயிரிழந்ததாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: இந்த விபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்தது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் பலத்த காயமடைந்தாா். இருவரைத் தேடும் பணியில் தௌஜ் காவல் நிலையத்தின் குழு மற்றும் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.

சனிக்கிழமை காலை, தொழிற்சாலையில் காணாமல் போன தொழிலாளா்கள் இருவரின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

அவா்கள் இருவரும் உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள முபாரக்பூரைச் சோ்ந்த ஆலிம் (20), தில்லியில் உள்ள ஜாஃப்ராபாத்தைச் சோ்ந்த அரவிந்த் (27) என அடையாளம் காணப்பட்டனா்.

ஃபரீதாபாத்தில் வசிக்கும் 22 வயதான ஃபாசில் முதலுதவிக்குப் பிறகு டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

சுமாா் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT