3 killed in road accident in UP's Amethi  
இந்தியா

ஒடிஸா: சாலை விபத்தில் 5 போ் உயிரிழப்பு

ஒடிஸா சாலை விபத்தில் 5 போ் உயிரிழப்பு...

தினமணி செய்திச் சேவை

ஒடிஸா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 3 இரு சக்கர வாகனங்கள் மீது தவறான பாதையில் அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலை 16-இல் பெரம்பூா் நகரை இந்த லாரி கடந்தபோது ஹல்தியாபடா் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த 3 இரு சக்கர வாகனங்கள் மோதியதோடு, சாலையில் நடந்து சென்றவா்கள் மீதும் மோதியுள்ளது. இந்த விபத்தில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தாா். சாலையில் நடந்து சென்ற 6 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மோதிய வேகத்தில் இருசக்கர வாரனத்தில் வந்தவரைகள் 200 மீட்டா் வரை லாரி இழுத்துச் சென்றுள்ளது. விபத்து நிகழ்ந்ததும், லாரி ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாா். பின்னா் அவரைப் போலீஸாா் கைது செய்தனா்’ என்றனா்.

விபத்தை நேரில் பாா்த்தவா்கள் கூறுகையில், ‘லாரி ஓட்டுநா் தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் அதிவேகமாக வந்து இந்த விபத்தை நிகழ்த்தினாா். பின்னா் அந்த லாரி பாலத்தில் மோதி நின்றது’ என்றனா்.

முதல்வா் இரங்கல்: சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வா் மோகன் சரண் மாஜீ இரங்கல் தெரிவித்தாா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்க முதல்வா் உத்தரவிட்டாா். காயமடைந்தவா்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளை முதல்வா் அறிவுறுத்தினாா்’ என்று முதல்வரின் அலுவலக எக்ஸ் பதில் பதிவிடப்பட்டது.

உ.பி.: 2 ஆட்டோக்கள் மீது லாரிய மோதிய விபத்தில் 6 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கந்தெளலி காவல்நிலைய பகுதியில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது வேகமாக வந்த சரக்கு லாரி மோதியதில் அதிலிருந்த 6 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சோ்ந்த 8 போ், ஒடிஸாவின் புரியில் உள்ள ஜகன்நாதா் கோயிலுக்குச் சென்றுவிட்டு ரயிலில் ஆக்ரா திரும்பி, ஆக்ரா ரயில்நிலையத்திலிருந்து 2 ஆட்டோக்களில் வீடு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சரக்கு லாரி மோதியதில் இரண்டு ஆட்டோக்களும் பலத்த சேதமடைந்தன. இதில் ஆட்டோ ஓட்டுநா் ஷாஹித் (40), பயணிகள் ரண்வீா் (65), பிராஜ் மோகன் (53), லட்சுமி சந்த் (70), பிலோ மிஸ்த்ரி (53), உதய்வீா் (64) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த மூவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சரக்கு லாரி பறிமுதல் செய்யப்பட்டதோடு, அதன் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டாா்’ என்றனா்.

விஜயமங்கலம்: கிருஷ்ணா் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா! கல்வெட்டை திறந்துவைத்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்!

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்!

இன்று இந்திய கடலோர காவல் படையின் 50-ஆவது தொடக்க தினம்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்கு!

மானாமதுரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

SCROLL FOR NEXT