முகப்பு
இந்தியா

மோடி - ஷா ஆட்சியால் ஜனநாயகத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்: காங்கிரஸ்

மோடி - ஷா ஆட்சியால் தேர்தல் ஜனநாயகம் கடுமையான அச்சுறுத்தல்களைச் சந்திப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது பற்றி...

Updated On : 3 ஜூலை 2026, 2:55 pm IST
காங்கிரஸ் தலைவர்கள். - Center-Center-Delhi
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஆட்சியால் தேர்தல் ஜனநாயகம் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாககாங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 28 ஆம் தேதி 23 எதிர்க்கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக இந்தியத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினர்.

இந்தக் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளிட்யிட்டு கே.சி. வேணுகோபால் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

நமது நாட்டில் உள்ள தேர்தல் ஜனநாயகமானது மோடி - ஷா தலைமையிலான ஆட்சியால் மிகக் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.

நமது ஜனநாயகத்தில், நடைபெறும் அநீதியை தடுக்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

இல்லையெனில், 140 கோடி வாக்காளர்களுக்கு எதிரான அநீதி ஒவ்வொரு நாளும் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆகையால், தேர்தல்கள் முறையாக நடைபெறுவதற்கான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை வெளியிடுகிறேன் என்று கே.சி. வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

summary

Congress General Secretary K.C. Venugopal stated on Friday (July 3) that electoral democracy is facing severe threats under the rule of Prime Minister Narendra Modi and Home Minister Amit Shah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments