கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் செயலராக ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் செயலராக ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் புதன்கிழமை (ஜூன் 3) மாலை பதவியேற்றுக்கொண்டார். அவருடன் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா உள்பட 12 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் செயலராக மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இத்துடன், கூடுதலாக ராஜேந்திர சோழன் கர்நாடக மின் கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2008 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்ற ராஜேந்திர சோழன் கர்நாடகத்தின் துணை முதல்வராக டி.கே. சிவகுமார் பதவி வகித்தபோது அவருடைய செயலராகச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.