கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் நாளை பதவியேற்பு! ராகுல், கார்கே பங்கேற்பு!
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் நாளை பதவியேற்பது குறித்து...
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் நாளை (ஜூன் 3) பதவியேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா கடந்த சில நாள்களுக்கு முன்பு பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அம்மாநிலத்தின் புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 4.05 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமாருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.
இதையடுத்து, டி.கே. சிவகுமாருடன் 12 முதல் 14 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்த விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே, கே.சி. வேணுகோபால் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்களும் டி.கே. சிவகுமாரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பதவி விலகியுள்ள முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோர் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை இன்று நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
D.K. Shivakumar will take oath as the CM of Karnataka tomorrow (June 3).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.