பிரதமர் மோடி நல்ல நண்பர்: இந்தியாவுடன் வர்த்தம் மேற்கொள்ள டிரம்ப் விருப்பம்
இந்தியாவுடன் விரைவில் நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை
இந்தியாவுடன் விரைவில் நல்ல வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது, உங்கள் பிரதமரை (மோடி) எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்னுடைய நல்ல நண்பர். எங்களுக்குள் சிறந்த நட்புறவு இருக்கிறது.
பல ஆண்டுகளாக அமெரிக்காவை இந்தியா சுரண்டி வந்தது. அவர்கள் எங்கள் மீது பெரும் வரியை சுமத்தினர். ஆனால், அவர்கள் ஏதும் செலுத்தவில்லை.
Advertisement
Advertisement
இப்போது நிலைமை தலைகீழாக மாறி, நாங்கள் இந்தியாவுடன் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால், நாங்கள் விரைவில் ஒரு உடன்பாட்டுக்கு வருவோம் என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியதோடு, இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான தனிப்பட்ட உறவைச் சுட்டிக்காட்டி , இரு நாடுகளும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்நிலையில், இந்தியா உள்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 12.5 சதவிகித வரி விதிப்பது குறித்து டிரம்ப் அரசு பரிசீலித்து வருவதால், பேச்சுவார்த்தையில் நிச்சயமற்ற தன்மை நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.