மகாராஷ்டிரத்தில் வரதட்சணை வழக்குகள் குறைந்துள்ளன: அமைச்சர்
மகாராஷ்டிரத்தில் வரதட்சணை தடுப்பு நடவடிக்கைகள் பற்றி..
மகாராஷ்டிரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வரதட்சணை தொடர்பான குற்றங்கள் குறைந்துள்ளதாக அமைச்சர் பங்கஜ் போயர் தெரிவித்தார்.
மாநில சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்த பங்கஜ் போயர்,
மாநிலத்தில் வரதட்சணை தொடர்பான குற்றங்கள் 2022-இல் 180 வழக்குகள் இருந்த நிலையில் 2025-இல் 138 ஆகக் குறைந்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிர வரதட்சணை தடை விதிகள் 2003 மூலம், மாநிலம் வரதட்சணை எதிர்ப்புச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற வழக்குகளைக் கண்காணிக்க மாநில, மாவட்டம் மற்றும் தாலுகா மட்டங்களில் வரதட்சணை தடுப்பு அதிகாரிகளை நியமித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் காவல்துறையில் தனிப்பிரிவு அமைத்தல் உள்ளிட்ட அரசு எடுத்த நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.
வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் வன்முறை தொடர்பான புகார்களைத் தீர்க்க பெண்கள் உதவி எண்கள், நம்பிக்கை பிரிவுகள், விழிப்புணர்வு குழுக்கள் மற்றும் சிறப்புக் காவல் புலனாய்வுக் குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
வரதட்சணை தொடர்பான குற்றங்கள் குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், 2021ல் 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 534 பேர் கைது செய்யப்பட்டனர். 2022-ல் 180 வழக்குகளும், 515 பேர் வரதட்சணை தொடர்பான வழக்குகளில் கைதாகினர் என்று அவர் கூறினார். 2023ல், 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 381 பேர் கைது செய்யப்பட்டனர், 2024-ல் 139 பேர் 234 பேர் கைது செய்யப்பட்டனர், 2025-ல் 138 பேர் பதிவு செய்யப்பட்டனர், 313 பேர் கைது செய்யப்பட்டனர்.
வரதட்சணை தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 இன் கீழ் வழக்குகளை மறு ஆய்வு செய்யவும் மாவட்ட அளவிலான குழுக்கள் செயல்பட்டதாக அவர் கூறினார்.
மகாராஷ்டிரத்தில் நவம்பர் 26 வரதட்சணை எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுவதாகவும், டிசம்பர் 2ஆம் தேதி வரை ஏழு நாள்கள் வரதட்சணை எதிர்ப்பு வாரமாகக் குறிக்கப்படுவதாகவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களைப் புகார்களுடன் அணுகத் தயங்குகிறார்கள் என்றும் காங்கிரஸைச் சேர்ந்த நிதின் ரவத் குறிப்பிட்டார்.
வரதட்சணை துன்புறுத்தல் வழக்குகளை விரைவாகக் கண்காணித்து, புகார்களைப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்குமா என்று அவர் கேட்டார்.