கேரளத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் அமைச்சர்கள்.. பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!
பாஜகவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு பற்றி..
கேரளத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 47 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர்களான ராஜீவ் சந்திரசேகர் மற்றும் வி. முரளீதரன் ஆகியோர் நேமம் மற்றும் காழக்கூட்டம் தொகுதிகளில் பாஜக களமிறக்கியுள்ளது. மேலும், முன்னாள் மத்திய அமைச்சரான ஜார்ஜ் குரியனை காஞ்சிரப்பள்ளி தொகுதியில் போட்டியிடவும் அக்கட்சி நிறுத்தியுள்ளது.
பட்டியலின்படி, பூஞ்சார் சட்டப்பேரவைத் தொகுதியில் பி.சி. ஜார்ஜ், வட்டியூர்க்காவு தொகுதியில் ஆர். ஸ்ரீலேகா மற்றும் திருச்சூர் தொகுதியில் பத்மஜா வேணுகோபால் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவர்.
பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட குன்னத்தூர் தொகுதியில் ராஜி பிரசாத் களமிறங்குகிறார். கொட்டாரக்கரை தொகுதியில் ஆர். ரேஷ்மி போட்டியிடுகிறார்.
பாலக்காடு தொகுதியில் ஷோபா சுரேந்திரன், கோழிக்கோடு வடக்குத் தொகுதியில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் தனித்தொகுதியான சுல்தான்பத்தேரியில் கவிதா கே. எஸ். ஆகியோரை கட்சி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.