பாமக நிறைவுப் பட்டியல் வெளியீடு: 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள பாமக வேட்பாளர்களின் நிறைவுப் பட்டியல் வெளியிடு குறித்து...
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள பாமக வேட்பாளர்களின் நிறைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
2026 தமிழக சட்டப்பேரவையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
அதன்படி, பெரம்பூர் - கவிஞர் ம.திலகபாமா, தருமபுரி - முனைவர். சௌமியா அன்புமணி, விருத்தாசலம் மருத்துவர் தமிழரசி ஆதிமூலம், சேலம் மேற்கு - மு.கார்த்தி,
Advertisement
Advertisement
பென்னாகரம் - பாடி வெ. செல்வம், போளூர் - சி.ஆர். பாஸ்கரன், திருப்போரூர் - வழக்குரைஞர் கே.பாலு, ஜெயங்கொண்டம் - க. வைத்தி, சேலம் வடக்கு எஸ். சதாசிவம், விக்கிரவாண்டி - சி. சிவக்குமார், சோளிங்கர் - வழக்குரைஞர். க. சரவணன், மயிலாடுதுறை - சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, உத்திரமேரூர் - பெ. மகேஷ்குமார், ரிஷிவந்தியம் - அ.ப. செழியன், காட்டுமன்னார் கோயில் (தனி) - மருத்துவர் அன்பு. சோழன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்
கீழ்வேளூர் - ச. வடிவேல் இராவணன், அம்பத்தூர் - கே.என். சேகர், செஞ்சி - அ. கணேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
PMK Releases Final List: Candidates for 15 Constituencies Announced
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.