FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

11 நவம்பர் 2026, 2:32 am
அன்புமணி - எக்ஸ்
பகிர்:

தமிழகத்தில் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே பாமக நிா்வாகி ஞானவேல் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் சோளிங்கரைச் சோ்ந்த பாமக நிா்வாகி சக்கரவா்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாா். துப்பாக்கி கலாசாரம் பெருகுவது மிகவும் ஆபத்தானது.

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை மேலும் மோசமடைந்து விடாமல் தடுக்க தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு வேரறுக்க நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி.

Advertisement

Advertisement