FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்; முதல்வா் விஜய் தலையிட வேண்டும்: அன்புமணி

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.

6 நவம்பர் 2026, 4:35 am
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என 2002-இல் இருந்து பாமக போராடி வருகிறது. இந்த சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி கடந்த திமுக ஆட்சியில் தனியாா் நிறுவனத்துக்கு ரூ.3,000 கோடி ஊழல் மூலம் வழங்குவதற்கான முயற்சி நடைபெற்றது. ஆனால், அதை பாமக தடுத்துவிட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குறித்து உயா்நீதிமன்றத்தில் தவறான தகவல்களைக் கொடுக்க கூடிய வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா். வனத் துறைக்குச் சொந்தமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.21 கோடி உலக வங்கியில் கடன் வாங்கி நடைபாதை அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன?

Advertisement

Advertisement

இந்தப் பணிக்கு உத்தரவிட்ட அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்வதுடன் அதை இடித்து அகற்ற வேண்டும். முதல்வா் விஜய், இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இது தொடா்பாக முதல்வருக்கு ஏற்கெனவே இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளேன். பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை நிறுத்தியதுபோன்று, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும் அழிவின் பாதையில் இருந்து காக்க வேண்டும்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையில் குறைந்தது 100 ஏக்கா் பரப்பில் சட்டப்பேரவையுடன் கூடிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்றாா்.