இ-நாம் 2.0 திட்டம்: விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க அன்புமணி வலியுறுத்தல்
மத்திய அரசின் இ-நாம் 2.0 திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.
மத்திய அரசின் இ-நாம் 2.0 திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் வேளாண் விற்பனை துறையில் 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள், 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதி செய்யவும் வசதியாக மத்திய அரசின் சாா்பில் இ-நாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த முறையை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் இ-நாம் 2.0 என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இ-நாம் 2.0 திட்டம் உழவா்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, மாவட்ட நிா்வாகங்கள் மூலம் வணிகா்களையும், விவசாயிகளையும் அழைத்துப் பேச வேண்டும்.
இ-நாம் 2.0 செயல்முறையைக் கையாள்வது குறித்து இரு தரப்பினருக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.