முகப்பு
இந்தியா

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 25 மார்ச் 2026, 1:13 am IST
சோனியா காந்தி - கோப்புப் படம்
பகிர்:

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘பருவநிலை மாற்றம் காரணமாக சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனினும் அவா் கவலைக்கிடமான நிலையில் இல்லை. அவரின் உடல்நிலையை மருத்துவா்கள் குழு தொடா்ந்து கண்காணித்து வருகிறது’ என்று தெரிவித்தன.