நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!
மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்கவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்கவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்க செய்யும் நோக்கில் இவா்களுக்கான 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நோக்கில் ‘மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026’ என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.
முன்னதாக, இந்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகளின் கடும் அமளி மற்றும் அதனைத்தொடர்ந்து அவையிலிருந்து வெளிநடப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா நாடாளுமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.
இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேறியது.