முகப்பு
இந்தியா

5 மாநிலங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம்! பெண் வேட்பாளர்கள்?

ஒவ்வொரு பேரவைத் தேர்தலிலும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருப்பது ஏன்?

Updated On : 28 மார்ச், 2026 at 7:51 AM
பெண் வாக்காளர்கள் - File photo
பகிர்:

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போது, ஒரு தகவல் மட்டும் ஒன்றுபோல உள்ளது. அதுதான் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை

ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வாக்குப் பதிவின்போதும், வாக்களித்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் பெண் வாக்காளர்களே அதிகமாக இருப்பார்கள்.

ஆனால், கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மட்டும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. இதற்கு முழுச் சிறந்த உதாரணமாக இருப்பது கேரளம். பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட கேரளத்தில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இங்கு மொத்தமுள்ள வேட்பாளர்களில், பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.

கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடுவது வெறும் 50 பெண் வேட்பாளர்கள்தான். 140 தொகுதிகளில் 457 வேட்பாளர்கள் போட்டியிடும்போது, அதில் 54 பேர்தான் பெண்கள். அதாவது 10 சதவீதம்தான்.

ஆண்களை விட பெண்கள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளம். இங்கு 1.39 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், வேட்பாளர்கள் வெறும் 10 சதவிகிதம்தான். ஒரு திருநங்கை களத்தில் உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்களின்போது பெண் வேட்பாளர்களின் கை ஓங்கியிருக்கும். கிட்டத்தட்ட 54 சதவிகித பெண் வேட்பாளர்கள் இருப்பார்கள். ஆனால், பேரவை என்று வரும்போது அது பின்னடைவை சந்திக்கிறது என்கிறார்கள்.

அஸ்ஸாம் மட்டும் விதிவிலக்காகுமா என்ன? அங்கும் இதே நிலைதான். 2.49 கோடி மொத்த வாக்காளர்களில் 1.24 போடிப் பேர் பெண்கள். கடந்த இரண்டு பேரவைத் தேர்தல்களிலும் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்திருந்தனர். 82 மற்றும் 84 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இது பிரதிநிதிகள் என்று வரும்போது குறைந்து வருகிறது. அங்குள்ள 126 தொகுதிகளில் 722 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் மொத்தம் 59 பேர்தான் பெண்கள். இங்கு திருநங்கைகள் போட்டியிடவில்லை.

அதுபோல, போட்டியிடும் பெண்களும் அதிகம் வெற்றி பெறுவதில்லை என அஸ்ஸாம் தரவுகள் கூறுகின்றன. 2021ல் 76 பெண்கள் போட்டியிட்ட நிலையில் வெறும் 6 பேர்தான் தேர்வாகியிருக்கிறார்கள். 2016ல், 91 பெண்கள் போட்டியிட்டு வெறும் 8 பேர்தான் எம்எல்ஏ ஆனார்களாம். இந்த வெற்றிவாய்ப்புகளும், பெண் வேட்பாளர்களின் கதவுகளை மூடிவிடுவதாகக் கூறுகிறார்கள்.

summary

Why is there a low number of female candidates in every assembly election?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.