முகப்பு
இந்தியா

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது பற்றி...

Updated On : 30 மார்ச் 2026, 12:09 pm IST
மமதா பானர்ஜி - IANS
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கியது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதாவும் அதேநேரத்தில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement

மேற்குவங்கத்தில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப். 6 ஆம் தேதி. அதற்கு மறுநாள் ஏப். 7 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப். 9 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.

தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் ஏப். 23ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

summary

Filing of nominations begins for West Bengal Assembly elections phase I

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.