முகப்பு
இந்தியா

கேரளத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! காங்கிரஸ் 63, சிபிஎம் 26 இடங்களில் வெற்றி!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது குறித்து...

தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் நிர்வாகிகள் - பிடிஐ
பகிர்:

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. ஆளும் இடதுசாரியை வெளியேற்றி காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

140 தொகுதிகளை உடைய கேரளத்தில் ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதேபோன்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

கூட்டணிக் கட்சிகளின் வெற்றியால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 98 இடங்களையும், இடது ஜனநாயக முன்னணி 35 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 இடங்களிலும் இதர கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதன்மூலம் கடந்த இரு முறை தொடர்ந்து 10 ஆண்டுகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் இருந்து வெளியேறுகிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.

summary

Kerala vote counting 2026 Vote counting concluded in Kerala! Congress wins in 63 seats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.