பவானிபூரில் மமதா பின்னடைவு! இரு தொகுதிகளிலும் சுவேந்து அதிகாரி முன்னிலை!
மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் பற்றி...
மேற்கு வங்கத்தில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மமதா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப். 23 ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் காலை 9 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்று வருகிறது. பாஜக - 113, திரிணமூல் காங்கிரஸ் - 100, காங்கிரஸ் - 2 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மமதா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பவானிபூர் மற்றும் நந்திகிராம் என இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார்.
மேற்குவங்கத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
west bengal election results: Mamata behind in Bhowanipore, Suvendu ahead in both seats
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.