முகப்பு
இந்தியா

காங்கிரஸ் உறவு முறிவு; நாடாளுமன்றத்தில் திமுக தனித்து அமரும்! - கனிமொழி கடிதம்

காங்கிரஸுடனான கூட்டணி முறிவினால் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றித்தரக் கோரி அவைத் தலைவருக்கு கனிமொழி கடிதம்...

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி - SANSAD
பகிர்:

காங்கிரஸுடனான கூட்டணி முறிவினால் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றித்தரக் கோரி மக்களவைத் தலைவருக்கு கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க சில கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது.

திமுக கூட்டணியில் 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி புதிய கூட்டணியையும் உருவாக்கியுள்ளது. வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இது திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுகவினர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் இருக்கைக்கு அருகே திமுக எம்.பி.க்களின் இருக்கை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் தற்போது கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளதால் இருக்கைகளை மாற்றித்தர வேண்டும் என்று கோரியுள்ளார்.

summary

DMK writes to speaker to change seating arrangement in Lok Sabha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments