கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டதை மனதார வரவேற்கிறேன் - கே. சி. வேணுகோபால்
கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டதை மனதார வரவேற்கிறேன் என கே. சி. வேணுகோபால் தெரிவித்தது குறித்து...
கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டதை மனதார வரவேற்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஜக்கிய ஜனநாயக முன்னணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
காங்கிரஸ் கட்சியினுள் கேரளத்தின் முதல்வர் பதவிக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதனால், கேரளத்தின் முதல்வராகப் பதவியேற்கப் போவது யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசனை காங்கிரஸ் தலைமை இன்று (மே 14) தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய கே.சி. வேணுகோபால், ”கேரளத்தின் முதல்வராக வி.டி. சதீசனை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது. அந்த முடிவை நான் மனதார வரவேற்கிறேன். இதற்காக அவரை நான் வாழ்த்துகிறேன். கேரள மக்கள் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஒரு பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். வி.டி. சதீசன் தலைமையிலான அரசால் கேரள மக்களின் விருப்பங்களையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.
Congress Party General Secretary K.C. Venugopal has stated that he wholeheartedly welcomes the selection of V.D. Satheesan as the new Chief Minister of Kerala.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.