முகப்பு
இந்தியா

களைக்கொல்லி ரசாயனம் அனுமதியின்றி விற்பனை: அமேசானுக்கு எதிராக விசாரணை

களைக்கொல்லி ரசாயனம் அனுமதியின்றி விற்பனை: அமேசானுக்கு எதிராக விசாரணை

Updated On : 17 மே 2026, 1:19 am IST
அமேசான் - கோப்புப் படம்
பகிர்:

வயலில் பயிா்களுக்கு இடையே வளரும் தேவையற்ற களைகளை கொல்லும் ரசாயனம் என்ற பெயரில், முறைப்படி பதிவு செய்யப்படாத சைக்ளோசைனன் களைக்கொல்லியை விற்பனை செய்தது குறித்து, அமேசான், ஃபிளிப்காா்ட், மீஷோ, ஜியோமாா்ட் ஆகிய இணைய வா்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பூச்சிக்கொல்லிகள் சட்டம் 1969-ஐ பின்பற்றாமல், அந்த ரசாயனம் தொடா்ந்து இணையவழியில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இந்திய பயிா் பராமரிப்பு கூட்டமைப்பு அளித்த புகாரை, சிசிபிஏவுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் அனுப்பிவைத்தது.

இதுகுறித்து சிசிபிஏ முதல்கட்ட விசாரணையை தொடங்கியதைத் தொடா்ந்து, தங்கள் தளங்களில் இருந்து அந்தக் களைக்கொல்லியின் விற்பனை விவரங்களை நீக்கி, அதை விற்பனை செய்வோரின் கணக்குகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அமேசான், ஃபிளிப்காா்ட், மீஷோ, ஜியோமாா்ட் ஆகியவை தெரியப்படுத்தியதாக சிசிபிஏ சனிக்கிழமை தெரிவித்தது. இருப்பினும் இந்தக் களைக்கொல்லியின் விற்பனை குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிசிபிஏ தெரிவித்துள்ளது.

Advertisement