மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே
மத்திய அரசின் மீது அனைத்துத் தரப்பு மக்களும் கடும் கோபத்தில் உள்ளது பற்றி..
எரிபொருள் விலையுயர்வு தொடர்பாக மத்திய அரசின் மீது அனைத்துத் தரப்பு மக்களும் கடும் கோபத்தில் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கார்கே,
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்ததோடு, ஏழை மக்களைக் கொல்லும் ஒருவகையிலான விஷம். இது பிரதமர் மோடியின் தந்திரம்.
Advertisement
Advertisement
பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்த்தி வருகின்றனர். ஆனால், ஒரே வாரத்திற்குள் ரூ.10 முதல் ரூ. 12 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி இந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்த விரும்பவில்லை, மாறாக நாட்டை அழிவுப்பாதையை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறார். அதேவேளையில், தான் நாட்டிற்காகவே அனைத்தையும் செய்வதாகவும், தியாகம் செய்வதாகவும், மக்களுக்காக உழைப்பதாகவும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
மக்கள் துன்பப்படுகிறார்கள். பணவீக்கம் இதேபோன்று தொடர்ந்து உயர்ந்தால், வேலையின்மை அதிகரிக்கும், தொழிற்சாலைகள் மூடப்படும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் மூடப்படும்.
அனைத்து தரப்பு மக்களும் மோடி அரசின் மீது மிகவும் கோபத்தில் இருப்பதாகவும், ஏழை மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் திறனற்ற அரசாக மோடி அரசு விளங்குவதாகவும் அவர் கூறினார்.
வினாத்தாள் கசிவுப் பிரச்னை அதிகரித்துள்ளது. இப்பிரச்னைகளில் பிரதமர் ஏன் கவனம் செலுத்துவதில்லை? அவர் நாட்டை ஆள வேண்டும், சுற்றுலாப் பயணியைப் போல் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சுற்றித் திரிய வேண்டும் என்று நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.