FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மோடி தீவிரவாதியா? கார்கே விமர்சனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

கார்கே விமர்சனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது பற்றி...

Updated On : 22 ஏப்ரல் 2026, 3:15 pm IST
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி - ANI
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் பாஜக மூத்த தலைவர்கள் புதன்கிழமை புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சென்னையில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த கார்கே, மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ”பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி. அவருக்குப் பெண் விடுதலை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றில் விருப்பம் கிடையாது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகிய விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை பாஜக அச்சுறுத்துகிறது. அதன் அடிப்படையில்தான் பிரதமர் மோடியை ஒரு தீவிரவாதி என்று கூறுகிறேன். நான் தனிப்பட்ட முறையில் மோடியை விமர்சிக்கவில்லை” என்றார்.

Advertisement

Advertisement

பிரதமர் மோடியைத் தீவிரவாதி எனக் குறிப்பிட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்த நிலையில், பாஜகவின் உயர்நிலைக் குழுவினர் தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று இன்று புகார் அளித்துள்ளனர்.

இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரும் அடங்குவர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

”தேர்தல் ஆணையத்திடம் பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்திய இழிவான சொற்பிரயோகம் குறித்து நாங்கள் எடுத்துரைத்தோம். இது ஒரு தேசப் பிரச்னை. பிரதமரை தீவிரவாதி என்றழைப்பது குற்றமாகும்.

எந்தவொரு அரசியல் கட்சிகளும் பிரதமருக்கு எதிராக இத்தகைய அவதூறான சொற்பிரயோகத்தை பயன்படுத்தியதே இல்லை. இது ஜனநாயகத்துக்கு எதிராக இழிவான செயல். ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகவும் அமைகிறது. இது தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

summary

Is Modi a Terrorist? BJP Files Complaint with Election Commission Against Kharge's Criticism!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments