இசை கொண்டாடும் இசை

எம்.எஸ்.வி.யின் முத்தம்..!

DIN

எம்.எஸ்.வி.யின் முத்தம்

எம்.எஸ்.வி. சார் எப்போதும் என்னுள் இருக்கிறார். இது, மெல்ல திறந்தது கதவு பட கம்போஸிங் நேரம். அவர் இந்த மாதிரி முத்தம் கொடுத்தது இரண்டு, மூன்று சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது. பாராட்டினால் முத்தம் கொடுத்து வாழ்த்துவார். அது ரொம்பவே சிலிர்ப்பாக இருக்கும். சேலத்தில் ஓர் இசை நிகழ்ச்சி. கவிஞர் கண்ணதாசனுக்கு சிலை வைப்பதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி அது.

கே.வி. மகாதேவன் சார், எம்.எஸ்.வி. சார், நான் என மூன்று பேரும் அங்கே போனோம். ‘கண்ணே கலைமானே..’ பாட்டு அறிவிப்பு வந்தது. அப்போது பக்கத்தில் வந்த எம்.எஸ்.வி., ‘தம்பி, இந்தப் பாட்டுக்கு நான் ஆர்மோனியம் வாசிக்கட்டுமா..’ என்று குழந்தை மனதோடு கேட்டார்.

‘என்ன அண்ணா.. என்கிட்ட கேட்கிறீங்க..’ என்றேன். அந்தப் பாட்டுக்கு அவர் ஆர்மோனியம் வாசித்தார். ‘ஏழை என்றால் ஒரு வகை அமைதி.. ஊமை என்றால் ஒரு வகை அமைதி..’ என வரிகள் சன்னமாக கசிந்துகொண்டிருந்தது. அந்தப் பாடலில் ‘நானோ கிளிப்பேடு..’ என்ற வரி வந்தது. வாசித்துக்கொண்டிருந்தவர், ஓடிவந்து என்னை ஆரத்தழுவி முத்தம் கொடுத்து சிலிர்த்தார். ‘என்னய்யா மியூசிக் இது.. ஏதோ மாதிரி இருக்குய்யா.. கிரேட் ராஜா..’ என்று அங்கேயே வாழ்த்தினார். ரசிகர்களின் கைத்தட்டல் அடங்க பல நிமிஷங்கள் ஆனது. அது பெரிய மனசு’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

SCROLL FOR NEXT