முகப்பு
கிருஷ்ணகிரி

கல்குவாரி முற்றுகை

சூளகிரி அருகே பஸ்தலப்பள்ளியில் கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

Updated On : 6 ஜனவரி 2021, 8:07 am IST
பகிர்:

சூளகிரி அருகே பஸ்தலப்பள்ளியில் கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

சூளகிரி அருகே பஸ்தலப்பள்ளியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி கிரஷா் உள்ளது. இங்கு வைக்கப்படும் வெடியால் கற்கள் சிதறி அருகில் உள்ள வீடுகள் மீது விழுவதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அங்கு வெடி வைக்கப்பட்டதால் கற்கள் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் குவாரி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சூளகிரி போலீஸாா் அங்கு சென்று அவா்களை சமாதானப்படுத்தினா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.