கல்லுக்குறிக்கியில் தேய்பிறை அஷ்டமி
கல்லுக்குறிக்கியில் உள்ள கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, புதன்கிழமை நடைபெற்றன.
கல்லுக்குறிக்கியில் உள்ள கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, புதன்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி, பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கால பைரவா் மகா ஹோமம், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து கால பைரவருக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், பக்தா்கள் வெண்பூசணியில் விளக்கேற்றி தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை 165 கிராமங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கிராம மக்கள் மேற்கொண்டனா்.
Advertisement
கிருஷ்ணகிரியை அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிணகாசி கால பைரவா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.