வடிவேலு, பிரபு தேவா நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
வடிவேலு, பிரபு தேவா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்து...
நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனைப் படக்குழு விடியோவாக வெளியிட்டுள்ளது.
நடிகரும் நடன இயக்குநருமான பிரபு தேவா மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளனர்.
1990-கள் முதல் இருவரும் ஒன்றாக நடித்து வெளியான படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் இந்தப் படத்துக்கு “பேங் பேங்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தலைவர் தம்பி தலைமையில் படத்தை தயாரித்த கண்ணன் ரவி குரூப்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர ராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
Vadivelu and Prabhu deva starring BANG! BANG! And it's Wrap
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.