பிரபு தேவா நடித்த மூன் வாக் வெளியீடு அறிவிப்பு!
மூன் வாக் வெளியீடு அறிவிப்பு...
நடிகர் பிரபு தேவா நாயகனாக நடித்த மூன் வாக் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், 'மூன்வாக்'. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.
Advertisement
Advertisement
நீண்ட நாள்களாக இப்படத்தின் தயாரிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், மூன் வாக் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலு இணைந்து நடித்த பேங் பேங் திரைப்படம் இம்மாத வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The film Moon Walk, starring Prabhu Deva in the lead role, is set to release for Diwali.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.