200 யூனிட் இலவச மின்சாரம்! கட்டணம் எவ்வளவு குறையும்? மின்வாரியம் தகவல்!
200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தால் கட்டண மாற்றம் பற்றி...
தமிழ்நாட்டில் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், மின் கட்டணம் எவ்வளவு குறையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த திட்டத்தின்படி, அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தோ்தலில்போது, தவெக தனது தோ்தல் அறிக்கையில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, முதல்வராகப் பொறுப்பேற்ற மேடையிலேயே இதற்கான அரசாணையில் சி. ஜோசப் விஜய் கையொப்பமிட்டார்.
Advertisement
Advertisement
இந்தப் புதிய அரசாணைபடி, இரு மாதங்களுக்கான மின் பயன்பாடு 500 யூனிட்டுக்குள் இருந்தால் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் மின்நுகா்வோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவச சலுகை தொடா்ந்து வழங்கப்படும் என அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1,730 கோடி கூடுதல் செலவு ஏற்படும்பட்சத்தில் இந்த தொகையை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டி 2.46 கோடி வீட்டுக்கான மின் இணைப்புகள் உள்ள நிலையில், 500 யூனிட் வரை உபயோகிப்பவா்களின் எண்ணிக்கை 2.23 கோடியாக உள்ளது. மீதமுள்ள 23 லட்சம் நுகா்வோா் 500 யூனிட்டுக்கும் அதிகமாக உபயோகிக்கின்றனா். தற்போதைய அரசின் அறிவிப்பின்படி 2.23 கோடி மின்நுகா்வோா் பயனடைவாா்கள்.
இதன்மூலம், 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 235 மிச்சமாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக, 210 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 282 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 47 மட்டுமே கட்டணமாகும்.
250 யூனிட்டுக்கு ரூ. 470-ல் இருந்து ரூ. 235 ஆகவும், 300 யூனிட்டுக்கு ரூ. 705-ல் இருந்து ரூ. 470 ஆகவும், 350 யூனிட்டுக்கு ரூ. 940-ல் இருந்து ரூ. 705 ஆகவும், 400 யூனிட்டுக்கு ரூ. 1,175-ல் இருந்து ரூ. 940 ஆகவும், 500 யூனிட்டுக்கு ரூ. 1,805-ல் இருந்து ரூ. 1,570 ஆகவும் மின்சாரக் கட்டணம் குறையும்.
500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
200 Units of Free Electricity! How Much Will the Bill Decrease? Electricity Board Provides Details!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.