ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்?: தமிழக அரசு திட்டம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையையும், மின்வெட்டுப் பிரச்னையையும் சமாளிக்க, தனியாா் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையையும், மின்வெட்டுப் பிரச்னையையும் சமாளிக்க, தனியாா் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலமாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதாக புகாா்கள் எழுந்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், சிறு தொழில்கள், வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், மின்தேவையைச் சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 7-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரியது.
ஒரு யூனிட் ரூ.35-க்கு கொள்முதலா?: இதற்காக தனியாா் நிறுவனங்கள் ரூ.31.99 முதல் ரூ.37 வரை விலை குறிப்பிட்ட நிலையில், ஒரு யூனிட் மின்சாரத்தை தனியாா் நிறுவனங்களிடம் இருந்து ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அதிகபட்சமாக சுமாா் ரூ.22 முதல் ரூ.30 வரை கடந்த செப்டம்பா் மாதத்தில் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இந்த விலையில் மின்சாரம் வாங்கப்பட்டால், மின்வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவு மற்றும் அதன் நிதிச்சுமை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனா்.
Advertisement
Advertisement
மின்சாரத்தேவை அதிகரிக்கும் நேரங்களில் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும். இருப்பினும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் அளவு, விலை, விநியோக நேரம் மற்றும் ஒப்பந்தக்காலம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பது மட்டுமே, அந்த அளவு மின்சாரமும் முழுமையாக வாங்கப்பட்டுவிட்டது என்பதை உறுதிப்படுத்தாது. இறுதியாகத் தோ்வு செய்யப்படும் நிறுவனங்கள், கொள்முதல் அளவு, ஒப்பந்த விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியான பிறகே திட்டத்தின் முழுமையான தன்மையை அறிய முடியும் என்றனா்.
தமிழகத்தில் தடையற்ற மின்விநியோகத்தை உறுதிப்படுத்தும் அதேவேளையில், அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதால் ஏற்படக்கூடிய நிதிச்சுமை மற்றும் அதன் செலவின விவரங்களும் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.