தற்போதைய செய்திகள்

500 அடி உயர பாலத்தில் நின்ற மலை ரயில்: திகில் அடைந்த பயணிகள்

குன்னூர், நவ.3: பெரும்பாலும் நடுக்காட்டில் நின்று பயமுறுத்தும் நீலகிரி மலை ரயில், வியாழன் அன்று 500 அடி உயர பாலத்தில் நின்று பயணிகளுக்கு திகில் ஊட்டியது. பாலத்தில் மாட்டிக் கொண்டு தவித்த பயணிகள் தரையி

ஜான்சன் சி. குமார்

குன்னூர், நவ.3: பெரும்பாலும் நடுக்காட்டில் நின்று பயமுறுத்தும் நீலகிரி மலை ரயில், வியாழன் அன்று 500 அடி உயர பாலத்தில் நின்று பயணிகளுக்கு திகில் ஊட்டியது. பாலத்தில் மாட்டிக் கொண்டு தவித்த பயணிகள் தரையில் இறங்க முடியாமல் தவித்தனர்.

குன்னூரில் இருந்து வியாழக்கிழமை மாலை மலை ரயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது என்ஜினில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. ரயில் ஒட்டுநர் ஆபத்தான பாலத்தை கடக்க எவ்வளவோ முயன்றும் மலை ரயில் அங்கேயே நினறு விட்டது.

சுமார் 500 அடி மேல் உள்ள பாலத்தின் மீது மலை ரயில் நின்று விட்டதால், பயணிகள் மிகவும் அச்சத்துடன் ரயிலில் அமர்ந்திருந்தனர். பல மணிநேரம் செய்வதறியாது ஆபத்தான நிலையில் ரயிலுக்குள் காத்துக் கிடந்தனர் அவர்களால் ரயிலை விட்டு இறங்கவும் முடிவில்லை. ஆபத்தான பாலத்தில் குழந்தைகளுடன்  நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, பாலத்தின் அருகில் உள்ள பள்ளத்தில் படிக்கட்டுகளை வெட்டி, பயணிகள் ஒவ்வொருவராக பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT