கடத்தப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்
நாகப்பட்டினம், நவ.11: கோடியக்கரையில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து இந்த தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டதாம். கோடியக்
நாகப்பட்டினம், நவ.11: கோடியக்கரையில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையிலிருந்து இந்த தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டதாம். கோடியக்கரையில் இருந்து, நாகப்பட்டினம் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பரவை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை சோதனையிட்டனர். அதில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள 15.6 கிலோ எடையுள்ள 156 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோடியக்கரையைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் டிரைவர் வேதய்யனை போலீசார் கைது செய்தனர்.