வறுமை காரணத்தால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை
திருக்கோவிலூர், அக்.4: திருக்கோவிலூர் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுரு. சலவைத் தொழிலாளியான இவர் கடந்த வருடம் சென்னையில் ஒரு கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தார். அவருடைய மனைவி உஷா (வயது 33
திருக்கோவிலூர், அக்.4: திருக்கோவிலூர் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுரு. சலவைத் தொழிலாளியான இவர் கடந்த வருடம் சென்னையில் ஒரு கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தார். அவருடைய மனைவி உஷா (வயது 33)
கணவன் இறந்த பிறகு இரு குழந்தைகளுடன் வசித்து வந்த அவர், சலவைத் தொழில் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் வருமானம் போதாமல் நேற்று இரவு பையன் நவீன் என்ற சிவானந்தம் (வயது 8), பெண் நந்தினி (வயது 6) இருவருக்கும் விஷத்தில் பழத்தை முக்கிக் கொடுத்துவிட்டு, தானும் தின்று தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.