புரட்டாசி சனி: சிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்
காரைக்கால், அக். 8 : புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி பலராமர் மீது அமர்ந்து உறியில் இருக்கும் வெண்ணெய் திருடும் காட்சியில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீரங்கத்த
காரைக்கால், அக். 8 : புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி பலராமர் மீது அமர்ந்து உறியில் இருக்கும் வெண்ணெய் திருடும் காட்சியில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கத்தில் சயன நிலைகொண்டு அருள்பாலிக்கும் ரங்கநாதரைப்போல் பெரிய திருமேனிகொண்டு சயன நிலையில் காரைக்காலில் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள்.
எல்லா தரப்பினரும் இத்திருத்தலத்துக்கு வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் முழுவதும் புரட்டாசித் திருவிழா பெயரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் உத்ஸவரான ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 8ஆம் தேதி சனிக்கிழமை உத்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு தாயார் சந்நிதி பகுதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
முதல் சனிக்கிழமை ஆலிலைக் கண்ணனாகவும், 2வது சனிக்கிழமை ஆநிரைக் கண்ணனாகவும் பல அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். 3வது சனிக்கிழமை, உயரத்தில் உறியில் உள்ள வெண்ணெயை பலராமர் மீது ஏறி திருடும் கண்ணனாக ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை முதல் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து உத்ஸவரையும், மூலவரையும் வழிபட்டனர். முன்னதாக மூலவருக்கும், உத்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் பக்தஜன சபாவினர் செய்திருந்தனர்.