ஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ 15.5 லட்சம் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர், அக் 12: ஸ்ரீபெரும்புரில் புதன்கிழமை பட்ட பகலில் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ 15.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர், அக் 12: ஸ்ரீபெரும்புரில் புதன்கிழமை பட்ட பகலில் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ 15.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(35) இவர் காட்டரம்பாக்கம் பகுதியில் தற்போது புதிதாக நிலம் வாங்கியுள்ளார். இதையடுத்து நிலத்தை பத்திரபதிவு செய்ய ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்ககு ரூ 15.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது காரில் தனது தம்பி மூர்த்தி மற்றும் நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வந்துள்ளார். இதையடுத்து சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தவுடன் காரில் ரூ 15.5 லட்சத்தை வைத்துவிட்டு காரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அலுவலகத்திற்குள் சென்றுள்ளனர். இதையடுத்து காரில் இருந்த பணத்தை எடுப்பதற்காக விஜயகுமார் வந்துள்ளார். அப்போது காரின் பின்பக்க கதவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு காரில் வைத்திருந்த ரூ 15.5 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து விஜயகுமார் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் எஸ்பி மனோகரன், டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு வந்து ஆய்வு செய்தனர்.
பட்ட பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காரின் கண்ணாடியை உடைத்து ரூ 15.5. லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.