முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை மாவட்டத்தில் 1 மணி வரை 52 சதவீதம் வாக்குப் பதிவு

நாகப்பட்டினம், அக். 17: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பகல் 1 மணி வரை சுமார் 52 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக மாவட்ட நிர்வாகக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நாகை நகராட்சி, மய

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:50 PM
பகிர்:

நாகப்பட்டினம், அக். 17: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பகல் 1 மணி வரை சுமார் 52 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக மாவட்ட நிர்வாகக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் நாகை நகராட்சி, மயிலாடுதுறை, கொள்ளிடம், செம்பனார்கோவில், சீர்காழி, குத்தாலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய பேருராட்சிகளுக்கும் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.  1,261 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடக்கம் முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. வெயில் இல்லாத மந்தமான வானிலை நீடித்ததும் இதற்குக் காரணமாகும்.

பகல் 1 மணி வரை நாகை மாவட்டத்தில் 52 சதவீதம் வாக்குகள் பதிவானதாகக் குறிப்பிடப்படுகிறது. நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளை விட பேரூராட்சி பகுதிகளிலேயே அதிக அளவில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதன் விவரம் :

திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்ற 5 ஊராட்சி ஒன்றியங்களின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 4,81,714. இதில், பகல் 1 மணி வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை - 2,55,659. வாக்குப் பதிவு சதவீதம் 53.

வாக்குப் பதிவு நடைபெற்ற பேரூராட்சிகளின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 35,603.  பகல் 1 மணி வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை - 25,681. வாக்குப் பதிவு சதவீதம் 58.

வாக்குப் பதிவு நடைபெற்ற நாகை நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 62,921. பகல் 1 மணி வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை - 25,681. வாக்குப் பதிவு சதவீதம் 41.

மாவட்டத்தில் பகல் 1 மணி வரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் வாக்களித்திருந்தனர். 1 மணி வரையிலான நேரத்தில் ஆண்கள் 50 சதவீதம் பேரும், பெண்கள் 54 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →