மயிலாடுதுறை கடைவீதியில் பயங்கரத் தீ
மயிலாடுதுறை, அக்.19: மயிலாடுதுறை கடைவீதியில் 6 மணி அளவில் பயங்கரத் தீ பற்றியது. கடைவீதியில் மணிக்கூண்டு அருகே வணிகப் பகுதியில் அடுத்தடுத்து 5 கடைகளில் தீப்பற்றியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல
மயிலாடுதுறை, அக்.19: மயிலாடுதுறை கடைவீதியில் 6 மணி அளவில் பயங்கரத் தீ பற்றியது. கடைவீதியில் மணிக்கூண்டு அருகே வணிகப் பகுதியில் அடுத்தடுத்து 5 கடைகளில் தீப்பற்றியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
தீபாவளி நேரம் என்பதால், ஜவுளி எடுக்க வந்தவர்கள், பொருள்கள் வாங்க வந்தவர்கள் என கூட்டம் அதிகமாக இருந்தது.
தீப்பற்றிய 5 கடைகளில் 2 பெரிய ஜவுளிக் கடைகளும் அடங்கும். தீயை கட்டுப்படுத்தமுடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.