முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் சாவு

திருக்கோவிலூர், செப். 6:  திருக்கோவிலூர் அருகே எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக செவ்வாய்கிழமை உயிரிழிந்தனர்.  திருக்கோவிலூரை அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் திவ்

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:24 PM
பகிர்:

திருக்கோவிலூர், செப். 6:  திருக்கோவிலூர் அருகே எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக செவ்வாய்கிழமை உயிரிழிந்தனர்.

 திருக்கோவிலூரை அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் திவ்யா(12), அருணாச்சலம் மகன் சிவக்குமார்(12), திருமலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் குணா(10) மற்றும் அவரது மகள் சினேகா(9) ஆகிய 4 பேரும் புலிக்கல் கிராம ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.  

 நீச்சல் தெரியாத 4 பேரும் ஏரிக் கரையோரத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திவ்யா தண்ணீரில் மூழ்கியதால், அவரை காப்பாற்றுவதாக இவர்கள் 3 பேரும் சென்றுள்ளனர். இந்நிலையில் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழிந்தனர்.

 பின் தகவலறிந்து அரகண்டநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஏரியில் மூழ்கி பலியான திவ்யா 7-ம் வகுப்பும், சிவக்குமார் 7-ம் வகுப்பும், சினேகா 4-ம் வகுப்பும், குணா 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். இதில் திருமலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சினேகா, குணா ஆகியோர் வீரபாண்டி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தபோது உயிரிழிந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →