முகப்பு
தற்போதைய செய்திகள்

மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியல்

ஸ்ரீபெரும்புதூர்,  செப்.17: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர், சுபத்ரா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்கு உள்ளே புகுந்ததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூ

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:32 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர்,  செப்.17: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர், சுபத்ரா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்கு உள்ளே புகுந்ததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள்கோயில் சாலையில் சனிக்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர், சுபத்ரா நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மழைக்காலங்களில் இந்தப் பகுதிகளில் தேங்கும் மழைநீர் சிங்கபெருமாள்கோயில் ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக செல்லும். ஆனால் தற்போது சிங்கபெருமாள்கோயில் ஸ்ரீபெரும்புதூர் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலை உயரமாக அமைக்கப்பட்டு வருவதால் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கடந்த வெள்ளிக்கிழமை கனமழை பெய்ததாலும் மழை நீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கும் மழை நீர்  ராஜீவ்காந்தி நகர், சுபத்ரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளே புகுந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிங்கபெருமாள்கோயில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் லட்சுமி, டிஎஸ்பி கஜேந்திரகுமார், பேரூராட்சி தலைவர் செல்வமேரி அருள்ராஜ் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்து மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →