தற்போதைய செய்திகள்

கும்பக்கரை, சோத்துப்பாறையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்!

சென்னை, ஏப்.16:  கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சள் ஆறு ஆகிய இடங்களில், தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் இன்

ப. இசக்கி

சென்னை, ஏப்.16:  கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சள் ஆறு ஆகிய இடங்களில், தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, மன்ற உறுப்பினர் லாசர் எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சள் ஆறு ஆகிய சுற்றுலா இடங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே, அந்த இடங்கள் அரசு சுற்றுலா மையங்களாக அறிவிக்கப்படுமா? என்று லாசர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கோகுல இந்திரா, கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சள் ஆறு ஆகிய பகுதிகளுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதைக் கருத்தில் கொண்டு அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்து அங்கே சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT