சாத்தூர் அருகே வன்னிமடையில் பொதுமக்கள் சாலை மறியல்
சாத்தூர், ஆக., 3 : சாத்தூர் அருகே மாணவிகளை கேலி செய்ததாகக் கூறி கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூர் - வன்னிமலை சா
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:51 PM
சாத்தூர், ஆக., 3 : சாத்தூர் அருகே மாணவிகளை கேலி செய்ததாகக் கூறி கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர் - வன்னிமலை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சாத்தூர் டிஎஸ்பி சின்னய்யா, தாசில்தார் சங்கர்லிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சாத்தூர் - வன்னிமடை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.