சாத்தூரில் மனைவியைக் கொன்ற கணவன் கைது
சாத்தூர், ஆக.10: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமீர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவரது மனைவி கற்பகவல்லி (25). திருமணமான நாளில் இருந்தே இவர்களிருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
சாத்தூர், ஆக.10: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமீர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவரது மனைவி கற்பகவல்லி (25). திருமணமான நாளில் இருந்தே இவர்களிருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் எழுவதுண்டாம். இந்நிலையில் இன்று காலை கருப்பசாமி வெளியே சென்று தண்ணீர் எடுத்துவந்துள்ளார். அப்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் பலத்த வாக்குவாதம் எழவே, கோபத்தில் கருப்பசாமி அரிவாளை எடுத்து கற்பகவல்லியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கற்பகவல்லி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதை அடுத்து சாத்தூர் தாலுகா போலீஸார் கருப்பசாமி மீது வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனர்.