முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே மினிவேன்-பஸ் மோதல்: 2 பேர் பலி

சாத்தூர், ஆக.10: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மினி வேன் ஒன்றுடன் தவறான பாதையில் வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். கோவில்பட்டி அருகே கழுகுமலை என்னும் இடத்தில்

Updated On : 26 செப்டம்பர், 2012 at 11:13 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:56 PM

சாத்தூர், ஆக.10: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மினி வேன் ஒன்றுடன் தவறான பாதையில் வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

கோவில்பட்டி அருகே கழுகுமலை என்னும் இடத்தில் இருந்து இருக்கங்குடி கோயிலுக்கு வந்தவர்கள் ஒரு மினி வேனில் ஊர் திரும்பினர். அவர்கள் வந்த வேன், கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சின்னஓடைப்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே தவறான திசையில் வந்த அரசுப் பேருந்துடன் திடீரென மோதியது. இதில், வேனில் பயணம் செய்த தெய்வக்கனி(50), சுப்புலட்சுமி(40) இருவரும் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் கோவில்பட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.