தனியார் வங்கி ஊழியர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
சேலம், ஆக., 17 : சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த அருண் பைனான்ஸியராகவும், தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பிரிவில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4.8.2008 அன்று இரவு மர்ம கும்பலால் படுகொலை
சேலம், ஆக., 17 : சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த அருண் பைனான்ஸியராகவும், தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பிரிவில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4.8.2008 அன்று இரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து சேலம் மாநகர போலிஸார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி இன்று தீர்ப்பை வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட தீபக், அருண் ராய், பாபு, மாதேஷ் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.