முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு முத்தங்கி அணிவிப்பு

காரைக்கால், ஆக. 19 : திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்ஸவருக்கு முத்தங்கி சனிக்கிழமை அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகு

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:33 PM
பகிர்:

காரைக்கால், ஆக. 19 : திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்ஸவருக்கு முத்தங்கி சனிக்கிழமை அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

இக்கோவில் மூலவர், உற்ஸவர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆண்டாள் ஆகியோருக்கு நன்கொடையாளர்கள் மூலம் சிறப்பு அங்கிகள் தயார் செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டு வருகின்றது.

உற்ஸவர் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவியாருக்கு முத்தங்கி சனிக்கிழமை அணிவிக்கப்பட்டது. முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியாருடன் பெருமாள் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் பெருமாளை வழிபட்டனர்.

வைகுண்ட ஏகாதசி மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஒரு வாரம் முன்பு மூலவரான ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாளுக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசம் அணிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கியும், ஸ்ரீ ஆண்டாளுக்கு வெள்ளி அங்கியும் அணிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →